ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ள முடியும்? அரசின் விதிமுறைகள்
தங்கம் விலை அதிகரித்தாலும் இந்தியாவில் தங்கத்தின் மீதுள்ள முதலீடு அதிகரித்துள்ளது. பல நூற்றாண்டுகளாகவே தங்கத்தின் மீதுள்ள முதலீடுகள் அதிகரித்துகொண்டே உள்ளது. ஆனால் என்னதான் தங்கத்தை வாங்கி குவித்தாலும், அதனை வீட்டில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை. எனவே வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துகொள்ளலாம்? விதிமுறைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். திருமணமான பெண் ஒருவர் குறைந்த பட்சம் 500 கிராம் தங்கத்தை வைத்துக்கொள்ளலாம். அதுவே திருமணம் ஆகாத பெண் 250 கிராம் வைத்துக்கொள்ள ஒரு அறிக்கை கூறுகிறது. மேலும், குடும்பத்தில் ஒரு ஆண் திருமணம் ஆனாலும், இல்லையென்றாலும் 250 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம் . இதனை அரசு விதிகளின்படி செயல்பட்டால் தங்கத்தை பறிமுதல் செய்ய முடியாது.
ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ள முடியும் - அரசாங்க விதிமுறைகள்
அதுவே நீங்கள் வாங்கிய தங்கத்தை மூன்று ஆண்டுகளில் விற்பனை செய்தால் அதற்கு வரி விதிக்கப்படும். இந்த வரியை நீங்கள் வருமான வரியுடன் சேர்த்து கட்டவேண்டும். நீண்ட ஆண்டுக்கு பின் விற்றால் 20% வரி அல்லது 4 சதவீதம் மட்டுமே விதிக்கப்படும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் 950 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் இருந்தால் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தங்கத்தை போன்றே பணத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம், ஆனால் அதற்கு எல்லாம் எங்கிருந்து வந்தது என உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.