Page Loader
ஹெல்த் இன்சூரன்ஸ் பணமில்லா உரிமைகோரல்கள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்படும்: IRDAI
உரிமைகோரல் மறுஆய்வுக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்க முடியாது

ஹெல்த் இன்சூரன்ஸ் பணமில்லா உரிமைகோரல்கள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்படும்: IRDAI

எழுதியவர் Venkatalakshmi V
May 30, 2024
06:25 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) உடல்நலக் காப்பீட்டின் பணமில்லா உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கு ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. முந்தைய 55 கட்டளைகளை மாற்றியமைக்கும் இந்த உத்தரவு, மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற கோரிக்கையைப் பெற்ற மூன்று மணி நேரத்திற்குள் இறுதி அங்கீகாரத்தை வழங்க காப்பீட்டாளர்களை கட்டாயப்படுத்துகிறது. இதுகுறித்து IRDAI, "எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பாலிசிதாரர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு காத்திருக்க தேவையில்லை"எனத்தெரிவிக்கிறது. பாலிசிதாரர் சிகிச்சையின் போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தால், மருத்துவமனைகள் உடனடியாக சடலத்தை விடுவிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது. கூடுதலாக, உரிமைகோரல் மறுஆய்வுக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்க முடியாது. ஒவ்வொரு கோரிக்கை நிராகரிப்பையும் கவனமாக மதிப்பாய்வு செய்து முடிவெடுப்பதற்கு இந்தக் குழு பொறுப்பாகும்.

உரிமைகோரல்

IRDAI சரியான நேரத்தில் பணமில்லா உரிமைகோரலை வலியுறுத்துகிறது

IRDAI ஆனது, காப்பீட்டாளர்கள் முன் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 100% ரொக்கமில்லா க்ளைம் செட்டில்மென்ட்டை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அவசரகால சூழ்நிலைகளில், பணமில்லா அங்கீகார கோரிக்கைகள் பெறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, ஜூலை 31, 2024க்குள் தேவையான நடைமுறைகளை நிறுவுமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு பணமில்லா க்ளெய்ம் செயல்முறைக்கு உதவ, மருத்துவமனைகள் மற்றும் பிற வழிகள் மூலம் பிரத்யேக ஹெல்ப் டெஸ்க்குகளை அமைக்குமாறு காப்பீடு நிறுவனங்களை IRDAI வலியுறுத்தியுள்ளது. காப்பீடு நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்களின் பட்டியலைக் காண்பிக்க வேண்டும். அங்கு பாலிசிதாரர்கள் பணமில்லா க்ளெய்ம் செட்டில்மென்ட்டைப் பெறலாம்.