NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / உபெர் போட்டியாளரான நம்ம யாத்ரியில் 11 மில்லியன் டாலர் முதலீடு செய்தது கூகுள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உபெர் போட்டியாளரான நம்ம யாத்ரியில் 11 மில்லியன் டாலர் முதலீடு செய்தது கூகுள் 

    உபெர் போட்டியாளரான நம்ம யாத்ரியில் 11 மில்லியன் டாலர் முதலீடு செய்தது கூகுள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2024
    01:21 pm

    செய்தி முன்னோட்டம்

    மூவிங் டெக் இன்னோவேஷன்ஸ் லிமிடெட், பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனமாகும். இது நம்ம யாத்ரி உட்பட சமூகம் சார்ந்த மொபிலிட்டி ஆப்ஸ்களை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், இந்த நிறுவனத்திற்கு $11 மில்லியன் முதலீடு கிடைத்துள்ளது.

    ப்ளூம் வென்ச்சர்ஸ், ஆன்ட்லர், கூகுள் மற்றும் பிற முதலீட்டாளர்கள் ஆகியோர் இதற்கான முதலீட்டை செய்துள்ளனர்.

    அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் முதல் துணிகர நிதி இதுவாகும்.

    "இந்த நிதியுதவி எங்களை புதுமைகளை உருவாக்கவும் மேலும் வளரவும் உதவும்" என்று மூவிங் டெக் இன்னோவேஷன்ஸின் உயர் நிர்வாகிகளான மகிழன் செல்வன் மற்றும் ஷான் எம் எஸ் ஆகியோர் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

    கூகுள் 

    தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய உள்ளது நம்ம யாத்ரி 

    இந்த நிதியை தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மேம்பாடு (R&D), மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய நம் யாத்ரி திட்டமிட்டுள்ளது.

    ஓட்டுநர்களுக்கு அதிகாரம் அளிப்பது, பொதுப் போக்குவரத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் நேரடி-ஓட்டுநர் மற்றும் பலதரப்பட்ட போக்குவரத்து மாதிரிகள் மூலம் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துதல் ஆகியவை இந்த நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும்.

    "10 மடங்கு சிறந்த தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்" என்று செல்வன் மற்றும் ஷான் கூறியுள்ளனர்.

    ஏப்ரல் 2024 இல், பணம் செலுத்தும் நிறுவனமான ஜுஸ்பே அதன் ரைடு-ஹெய்லிங் துணை நிறுவனமான நம்ம யாத்ரியை மூவிங் டெக் இன்னோவேஷன்ஸ் லிமிடெட் என்ற தனி நிறுவனமாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    கூகுள்

    ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்களுக்கு கூகுள் தனியுரிமை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஏன்?  ஆண்ட்ராய்டு
    கட்டண தகராறில் இந்திய மேட்ரிமோனி ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்  தொழில்நுட்பம்
    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு  இந்தியா
    மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் முடிவு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025