Loading...
1980-க்குப் பிறகு முதல்முறையாக 25% சரிந்த தங்கம் விலை: வரலாற்றுத் தரவுகள் சொல்லும் மீட்சி ரகசியமும் முதலீட்டாளர்களுக்கான பாடமும்
1980-க்குப் பிறகு முதல்முறையாக தங்கம் விலை 25% சரிவு

1980-க்குப் பிறகு முதல்முறையாக 25% சரிந்த தங்கம் விலை: வரலாற்றுத் தரவுகள் சொல்லும் மீட்சி ரகசியமும் முதலீட்டாளர்களுக்கான பாடமும்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 19, 2026
07:04 pm

செய்தி முன்னோட்டம்

நடப்பு 2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை உச்சத்திலிருந்து கடுமையாக சரிந்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வியாழக்கிழமையான நவம்பர் 19 அன்று MCX சந்தையில் 10 கிராம் தங்கம் ₹1,28,842 ஆக சரிந்து வர்த்தகமானது. ஃபண்ட்ஸ்இந்தியா ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி அக்டோபர் 31 வரை தங்கம் 25 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 1980-ஆம் ஆண்டிற்குப் பிறகு தங்கம் சந்தித்த மிகக் கடுமையான ஆண்டுக்குள்ளான சரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

சரிவு பதிவுகள்

சராசரி 13% சரிவுகளும் 1980 மற்றும் 1981-ஆம் ஆண்டுகளின் வரலாற்றுப் பதிவுகளும்

1980 ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் ஆண்டுக்குள்ளான சராசரி சரிவு சுமார் 13 சதவீதமாகவே இருந்து வந்துள்ளது.

கடந்த 2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் 15 சதவீதமும், 2023-ல் 10 சதவீதமும் தங்கம் சரிந்தது.

ஆனால் 2026-ன் வீழ்ச்சி மிகவும் ஆழமானதாக உள்ளது.

இந்த ஆய்வில் 1980-ஆம் ஆண்டு தங்கம் உச்சத்திலிருந்து 40 சதவீதம் சரிந்ததே மிக அதிகபட்ச வீழ்ச்சியாகும்.

அதற்கடுத்தபடியாக 1981-ல் ஏற்பட்ட 25 சதவீதச் சரிவுக்கு இணையாக 2026-ன் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தங்கத்தின் மீட்சி

கடும் சரிவுகளுக்குப் பிறகும் 78% ஆண்டுகளில் லாபம் தந்த தங்கத்தின் மீட்சி வரலாறு

ஆண்டுக்குள்ளாக இரட்டை இலக்க சரிவுகளை சந்தித்தாலும் டிசம்பர் இறுதியில் தங்கம் பெரும்பாலும் லாபத்தையே கொடுத்துள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட காலத்தில் சுமார் 78 சதவீத ஆண்டுகளில் தங்கம் நேர்மறையான வருமானத்தை அளித்துள்ளது.

உதாரணமாக 1980-ல் 40 சதவீதம் சரிந்த தங்கம் ஆண்டின் இறுதியில் 4 சதவீத லாபம் தந்தது.

இதேபோல் 2008-ல் 20 சதவீதச் சரிவுக்குப் பிறகும், 2020-ல் 15 சதவீத சரிவுக்குப் பிறகும் தங்கம் 28 சதவீத லாபத்துடன் முடிவடைந்தது.

ADVERTISEMENT

முதலீட்டாளர்களுக்கான எச்சரிக்கை

1981 மற்றும் 2013 நஷ்ட ஆண்டுகளும் முதலீட்டாளர்களுக்கான முக்கிய எச்சரிக்கையும்

அனைத்து சரிவுகளும் உடனடியாக மீண்டுவிடாது என்பதையும் வரலாற்றுத் தரவுகள் முதலீட்டாளர்களுக்கு நினைவூட்டுகின்றன.

கடந்த 1981-ல் 25 சதவீதம் சரிந்த தங்கம் ஆண்டின் இறுதியில் 22 சதவீத நஷ்டத்தை சந்தித்தது.

அதேபோல் 2013-ல் 24 சதவீதம் வீழ்ச்சியடைந்து 18 சதவீத நஷ்டத்துடன் நிறைவடைந்தது.

2026 அக்டோபர் இறுதி வரை தங்கம் 5 சதவீத எதிர்மறை வருமானத்தில் உள்ளது.

எனவே முதலீட்டாளர்கள் அவசரப்படாமல் தங்கள் முதலீட்டுக் கால அளவைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

ADVERTISEMENT