Page Loader
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ₹67,000 ஐ தாண்டியது
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.67,000 ஐ தாண்டி வரலாறு காணாத உச்சம்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ₹67,000 ஐ தாண்டியது

எழுதியவர் Sekar Chinnappan
Mar 31, 2025
10:43 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் திங்கட்கிழமை (மார்ச் 31) அன்று தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ₹520 உயர்ந்து, ₹67,400 ஐ எட்டியது. ஒரு கிராமின் விலையும் ₹65 அதிகரித்து ₹8,425 ஆக உயர்ந்தது. முன்னதாக, மார்ச் 29 அன்று, தங்கத்தின் விலை ஏற்கனவே கிராமுக்கு ₹20 மற்றும் சவரனுக்கு ₹160 அதிகரித்து, கிராமுக்கு ₹8,360 மற்றும் சவரனுக்கு ₹66,880 ஆக முடிவடைந்தது. இருப்பினும், மார்ச் 30 விடுமுறை நாளாக இருந்ததால், விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. சமீபத்திய உயர்வு தங்கத்தின் விலையை சாதனை உச்சத்திற்கு கொண்டு சென்று, ₹67,000 ஐ தாண்டியுள்ளது, இது நகை வாங்குபவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காரணம்

விலை உயர்வுக்கான காரணம்

சமீபத்திய வாரங்களில் தங்கத்தின் விலையில் நிலையான அதிகரிப்புக்கு உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக உள்ளதகா நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த விலை உயர்வு தங்கம் வாங்குபவர்களை, குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை மற்றும் திருமண காலங்களில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவரும் இந்த போக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் நிலையில், வரும் நாட்களில் மேலும் ஏற்ற இறக்கங்கள் தங்க விலையில் மேலும் தாக்கத்தை கொடுக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, வெள்ளி விலையைப் பொறுத்தவரை, திங்கட்கிழமை ஒரு கிராம் வெள்ளி ₹113க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹1,13,000க்கும் விற்கப்படுகிறது.