
பொதுமக்களுக்கு ஷாக்; வாரத்தின் முதல்நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாம ஒரே நிலையாக இருந்த தங்க விலையில் திங்கட்கிழமை (மே 5) சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகளவில் தங்கத்தின் விலையில் பொதுவான ஏற்றப் போக்கை ஏற்படுத்திய, தற்போதைய உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் அக்ஷய திருதியை கொண்டாட்டத்தின் போது உச்சத்தை எட்டிய பிறகு, தங்கத்தின் விலைகள் மிதமான சரிவைக் கண்டன.
கடந்த நான்கு நாட்களில், விலைகள் மாறாமல் இருந்தன, இது நகை வாங்குபவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நிம்மதியை அளித்தது.
கடந்த மே 2 அன்று, தங்கத்தின் விலை கிராமுக்கு ₹20 குறைந்து, கிராமுக்கு ₹8,755 ஆகவும், ஒரு சவரன் விலை ₹160 குறைந்து ₹70,040 ஆகவும் இருந்தது.
விலை உயர்வு
விலை உயர்வு எவ்வளவு?
இதைத் தொடர்ந்து வார இறுதி முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விகிதங்கள் நிலையாக இருந்தன.
இருப்பினும், திங்கள் நிலவரப்படி, சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தற்போதைய விலை கிராமுக்கு ₹20 அதிகரித்து ₹8,775 ஆக உள்ளது.
தற்போது ஒரு சவரனின் விலை ₹160 அதிகரித்து ₹70,200 ஆக உள்ளது. இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு ₹10 உயர்ந்துள்ளது.
இப்போது ஒரு கிராமுக்கு ₹7,250 மற்றும் ஒரு சவரனுக்கு ₹58,000 ஆக 18 கேரட் தங்கம் விற்பனையாகிறது.
இதற்கிடையில், வெள்ளி விலைகள் திங்களன்று மாறாமல் உள்ளன. வெள்ளி ஒரு கிராமுக்கு ₹108 மற்றும் ஒரு கிலோவுக்கு ₹1,08,000 என தொடர்ந்து விற்பனையாகிறது.