Page Loader
மீண்டும் விலை உயர்வை சந்தித்த தங்கம்; இன்றைய (மே 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய (மே 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

மீண்டும் விலை உயர்வை சந்தித்த தங்கம்; இன்றைய (மே 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
May 30, 2025
10:19 am

செய்தி முன்னோட்டம்

கடந்த இரண்டு நாட்களாக சரிவைக் கண்ட பிறகு, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே 30) அன்று குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது. ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை சந்தித்த தங்கம் விலை, உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் காரணமாக மே மாதம் முழுவதும் ஏற்ற இறுக்கமாகவே இருந்து வருகிறது. இது முதலீட்டாளர்கள் மற்றும் விசேஷங்களுக்காக நகை வாங்கும் பொதுமக்களின் மனநிலையையும் பாதித்தது. முன்னதாக, வியாழக்கிழமை அன்று, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹40 குறைந்து, ஒரு கிராமுக்கு ₹8,895 மற்றும் ஒரு சவரனுக்கு ₹71,160 (8 கிராம்) ஆகக் குறைந்தது.

விபரங்கள் 

தங்கம் வெள்ளி விலை விபரங்கள்

இருப்பினும், வெள்ளிக்கிழமை இந்த நிலை தலைகீழாக மாறி, தங்கம் ஒரு கிராமுக்கு ₹25 உயர்ந்து, 22 காரட் தங்கம் இப்போது ஒரு கிராமுக்கு ₹8,920 மற்றும் ஒரு சவரனுக்கு ₹71,360 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 18 காரட் தங்கமும் ஒரு கிராமுக்கு ₹20 அதிகரித்து ₹7,345 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஒரு சவரனின் விலை தற்போது ₹160 அதிகரித்து ₹58,760 ஆக உள்ளது. இதற்கு நேர்மாறாக, வெள்ளி விலைகள் சமீப நாட்களில் நிலையாகவே உள்ளன. ஒரு கிராம் வெள்ளியின் விலை தொடர்ந்து ₹111 ஆகவும், ஒரு கிலோகிராமின் விலை ₹1,11,000 ஆகவும் உள்ளது.