
ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சமீப நாட்களாக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது, இது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக அதிக தேவை ஏற்பட்டதால் இந்த விலையேற்றம் நடந்தது.
இது உலகளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக நினைத்து வாங்கி குவித்து வந்தனர்.
இந்நிலையில், உலக அரசியல் சூழ்நிலைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதால், தங்கத்திற்கான தேவை குறையத் தொடங்கியுள்ளது, இதனால் விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
புதன்கிழமை (மே 14) அன்று, சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹8,805 ஆகவும், சவரனுக்கு ₹70,440 ஆகவும் இருந்தது.
விலை குறைவு
எவ்வளவு குறைந்தது?
இந்நிலையில், வியாழக்கிழமை (மே 15) விலை கிராமுக்கு ₹195 குறைந்து, ஒரு கிராமுக்கு ₹8,610 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹68,660 ஆக இறங்கியுள்ளது. அதாவது ஒரு சவரனுக்கு ₹1,560 குறைந்துள்ளது.
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது. ஒரு கிராமுக்கு ₹160 குறைந்து, ஒரு கிராமுக்கு ₹7,095 ஆக உயர்ந்துள்ளது.
18 காரட் தங்கத்தின் விலை (8 கிராம்) தற்போது ₹56,760 ஆக உள்ளது, இது முந்தைய நாளை விட ₹1,280 குறைந்துள்ளது. மேலும், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 குறைந்துள்ளது, தற்போது ஒரு கிராம் ₹108 ஆகவும், ஒரு கிலோ ₹1,08,000 ஆகவும் விற்பனையாகிறது.