LOADING...
பெட்ரோல் விலையும் ஏறுகிறது, தங்கம் விலையும் ஏறுகிறது; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
பெட்ரோல் விலையும் ஏறுகிறது, தங்கம் விலையும் ஏறுகிறது

பெட்ரோல் விலையும் ஏறுகிறது, தங்கம் விலையும் ஏறுகிறது; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
May 19, 2026
10:47 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், செவ்வாய்கிழமை (மே 19) தங்க விலை சற்றே அதிகரித்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹120 அதிகரித்து ₹14,870 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 அதிகரித்து ₹1,18,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹131 அதிகரித்து ₹16,222 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,048 அதிகரித்து ₹1,29,776 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹100 அதிகரித்து ₹12,410 ஆகவும், ஒரு சவரன் ₹800 அதிகரித்து ₹19,280 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹300.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement