Page Loader
குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது

குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 08, 2024
11:17 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.20 உயர்ந்து ரூ.6,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.160 உயர்ந்து ரூ.50,800ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 6,805-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.54,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.87.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஆபரண தங்கத்தின் விலை