தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சனிக்கிழமை (மே 23) தங்க விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹14,730 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹1,17,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹55 குறைந்து ₹16,069 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹440 குறைந்து ₹1,28,552 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹40 குறைந்து ₹12,360 ஆகவும், ஒரு சவரன் ₹320 குறைந்து ₹98,880 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹295 ஆகவும், ஒரு கிலோ ₹2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிகும் நிலையில், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.