LOADING...
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
May 22, 2026
10:42 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 22) தங்க விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 குறைந்து ₹14,780 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 குறைந்து ₹1,18,240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹43 குறைந்து ₹16,124 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹344 குறைந்து ₹1,28,992 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹25 குறைந்து ₹12,400 ஆகவும், ஒரு சவரன் ₹200 குறைந்து ₹99,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹295 ஆகவும், ஒரு கிலோ ₹2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிகும் நிலையில், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியிலும் தங்கம் வெள்ளி விலைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement