இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 17
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.5,536-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.44,288-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.6,039-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.48,312-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.81.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.