வாரத்தின் முதல் நாளே ஷாக்! இன்றைய தங்கம் விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (அக்டோபர் 19), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹35 அதிகரித்து ₹13,570 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹280 அதிகரித்து ₹1,08,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹38 அதிகரித்து ₹14,804 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹304 அதிகரித்து ₹1,18,432 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது.
அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 அதிகரித்து ₹11,155 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 அதிகரித்து ₹89,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹240.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,40,000 ஆக விற்கப்படுகிறது.