Loading...
வாரத்தின் முதல் நாளில் நிம்மதி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாளில் நிம்மதி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2026
10:27 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (அக்டோபர் 12), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹40 குறைந்து ₹13,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹320 குறைந்து ₹1,10,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹44 குறைந்து ₹15,098 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹352 குறைந்து ₹1,20,784 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 குறைந்து ₹11,370 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 குறைந்து ₹90,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹245.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT