13 நாட்களாக வீழிச்சியில் தங்கத்தின் விலை; கிராம் கிட்டத்தட்ட ரூ.100 குறைந்தது
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்துவருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை 13 நாட்களில் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத்தங்கம் கிராம் ஒன்று ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6935க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.880 குறைந்து ரூ.55,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,565ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.60,520 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து கிராம் ஒன்று ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாட்களில் ₹2,720 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி!#SunNews | #GoldRate | #Chennai pic.twitter.com/rj2o7u91jF
— Sun News (@sunnewstamil) November 14, 2024