LOADING...
தங்கம் வெள்ளி விலைகள் தாறுமாறு சரிவு; இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் வெள்ளி விலைகள் தாறுமாறு சரிவு

தங்கம் வெள்ளி விலைகள் தாறுமாறு சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 06, 2026
10:53 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சனிக்கிழமை (ஜூன் 6) தங்க விலை கடுமையாகக் குறைந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹230 குறைந்து ₹14,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,840 குறைந்து ₹1,13,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹305 குறைந்து ₹15,491 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,440 குறைந்து ₹1,23,928 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹195 குறைந்து ₹11,910 ஆகவும், ஒரு சவரன் ₹1,560 குறைந்து ₹95,280 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹270 ஆகவும், ஒரு கிலோ ₹2,70,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போருக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், இரு தரப்பிற்கும் இடையே சிறுசிறு தாக்குதல்கள் நடைபெறும் நிலையில், தங்கம் விலை கடுமையாக குறைந்துள்ளது நகை வாங்க திட்டமிட்டவர்களிடையே மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement