
தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.656 சரிவு
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே உச்சத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை இன்று சற்று சரிந்துள்ளது. ஒரே நாளில் கிராம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட ரூ.82 சரிந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.9,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.600 குறைந்து ரூ.73,240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 9,987-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ, 79,896 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.1.00 குறைந்து கிராம் ஒன்று ரூ.119-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ. 73,240க்கு விற்பனை#SunNews | #Chennai | #Gold pic.twitter.com/5IRJHBI6zh
— Sun News (@sunnewstamil) June 24, 2025