LOADING...
ஒரு சவரனுக்கு ₹3,040! தங்கம் விலை தாறுமாறு சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஒரு சவரனுக்கு ₹3,040! தங்கம் விலை தாறுமாறு சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2026
10:11 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தங்க விலை கடுமையாக சரிந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹380 குறைந்து ₹13,570 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3,040 குறைந்து ₹1,08,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹414 குறைந்து ₹14,804 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3,312 குறைந்து ₹1,18,432 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹310 குறைந்து ₹11,350 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,480 குறைந்து ₹90,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹15 குறைந்து ₹255 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிலோ ₹15,000 குறைந்து ₹2,55,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement