LOADING...
இரண்டு நாள் சரிவுக்குப் பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?
இரண்டு நாள் சரிவுக்குப் பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு

இரண்டு நாள் சரிவுக்குப் பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 18, 2026
10:51 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், வியாழக்கிழமை (ஜூன் 18) தங்க விலை சற்றே அதிகரித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 அதிகரித்து ₹14,060 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 அதிகரித்து ₹1,12,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹32 அதிகரித்து ₹15,338 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹256 அதிகரித்து ₹1,22,704 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹20 அதிகரித்து ₹11,770 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹160 அதிகரித்து ₹94,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹275 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிலோ ₹5,000 குறைந்து ₹2,75,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement