Page Loader
குறைந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.960 சரிவு
தங்கத்தின் விலை நேற்றும் இன்றும் சற்று சரிந்துள்ளது

குறைந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.960 சரிவு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 17, 2025
11:25 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே உச்சத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை நேற்றும் இன்றும் சற்று சரிந்துள்ளது. ஒரே நாளில் கிராம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட ரூ.105 சரிந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.9,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.840 குறைந்து ரூ.73,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 10,037-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.80,296 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.0.10 ஏறி கிராம் ஒன்று ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post