வாரத்தின் முதல் நாளே ஷாக்! தங்கம் விலை தாறுமாறு உயர்வு; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், திங்கட்கிழமை (ஜூன் 15) தங்க விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹210 அதிகரித்து ₹14,070 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,680 அதிகரித்து ₹1,12,520 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹229 அதிகரித்து ₹15,349 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,832 அதிகரித்து ₹1,22,792 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹190 அதிகரித்து ₹11,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,520 அதிகரித்து ₹94,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 அதிகரித்து ₹280 ஆகவும், ஒரு கிலோ ₹10,000 அதிகரித்து ₹2,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் இடையேயான போர் முடிந்து அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை அதிகரித்துள்ளது நகை வாங்க திட்டமிட்டவர்களிடையே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.