LOADING...
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தங்கம் விலை சவரனுக்கு ₹2,400 குறைவு
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தங்கம் விலை சவரனுக்கு ₹2,400 குறைவு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 11, 2026
11:20 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வியாழக்கிழமை (ஜூன் 11) தங்க விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹300 குறைந்து ₹13,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,400 குறைந்து ₹1,08,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹327 குறைந்து ₹14,728 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,616 குறைந்து ₹1,17,824 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹260 குறைந்து ₹11,310 ஆகவும், ஒரு சவரன் ₹2,080 குறைந்து ₹90,480 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹260 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா -ஈரான் போருக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், இரு தரப்பிற்கும் இடையே சிறுசிறு தாக்குதல்கள் நடைபெறும் நிலையில், தங்கம் விலை கடுமையாக குறைந்துள்ளது நகை வாங்க திட்டமிட்டவர்களிடையே மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement