
ஆபரண தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து உள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.35 உயர்ந்து ரூ.6,420க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.51,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 6,875-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை இரண்டு ரூபாய் உயர்ந்து கிராம் ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு#TamilnewsTN | #GoldPrice | #Gold | #GoldRate pic.twitter.com/nBo1rVMoLV
— Tamil News TN (@TamilNewsTN) July 31, 2024