தொடர்ந்து ₹1 லட்சத்தில் நீடிக்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 16) சற்றே குறைந்தது, எனினும் அது ஒரு லட்சத்தை நெருங்கியே உள்ளது. செவ்வாய்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹165 குறைந்து ₹12,350 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,320 குறைந்து ₹98,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹180 குறைந்து ₹13,470 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1440 குறைந்து ₹1,07,784 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹140 அதிகரித்து ₹10,300 ஆகவும், ஒரு சவரன் ₹1120 அதிகரித்து ₹82,400 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ₹4 குறைந்து ₹211.00 ஆகவும், ஒரு கிலோ ₹4000 குறைந்து ₹2,11,000 ஆகவும் விற்பனை ஆகிறது. திருமண சீசன் மற்றும் அமெரிக்க வட்டி விகித குறைப்பு அறிவிப்பு போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் மீண்டும் விலையேற்றம் ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.