Page Loader
பங்குச்சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து 4-வது நாளாக குறையும் தங்கத்தின் விலை
4-வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை

பங்குச்சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து 4-வது நாளாக குறையும் தங்கத்தின் விலை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2025
11:14 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில மாதங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்றஇறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று போலவே இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.60 குறைந்து ரூ.8,225க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.480 உயர்ந்து ரூ.65,800ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.65 குறைந்து ரூ.8973-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ரூ.520 குறைந்து, சவரன் ஒன்று ரூ.71,784 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post