LOADING...
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 04, 2026
10:54 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (ஏப்ரல் 4) அதிகரித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹100 அதிகரித்து ₹13,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹800 அதிகரித்து ₹1,11,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹109 அதிகரித்து ₹15,218 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹872 அதிகரித்து ₹1,21,744 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹90 அதிகரித்து ₹11,635 ஆகவும், ஒரு சவரன் ₹720 அதிகரித்து ₹93,080 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹255.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,55,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement