மீண்டும் விலையேற்றத்தால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹40 அதிகரித்து ₹14,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹320 அதிகரித்து ₹1,14,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹44 அதிகரித்து ₹15,666 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹352 அதிகரித்து ₹1,25,328 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹40 அதிகரித்து ₹11,980 ஆகவும், ஒரு சவரன் ₹320 அதிகரித்து ₹95,840 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹275.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,75,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.