LOADING...
தங்கம் வெள்ளி விலைகள் சரிவு; நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் வெள்ளி விலைகள் சரிவு; நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 13, 2026
10:17 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹40 குறைந்து ₹14,060 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹320 குறைந்து ₹1,12,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹44 குறைந்து ₹15,338 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹352 குறைந்து ₹1,22,704 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹30 குறைந்து ₹11,730 ஆகவும், ஒரு சவரன் ₹240 குறைந்து ₹93,840 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹260.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement