LOADING...
இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 10, 2026
10:19 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹125 அதிகரித்து ₹14,125 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,000 அதிகரித்து ₹1,13,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹136 அதிகரித்து ₹15,409 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,088 அதிகரித்து ₹1,23,272 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் அதிகரிப்பு

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹125 குறைந்து ₹11,775 ஆகவும், ஒரு சவரன் ₹1,000 அதிகரித்து ₹94,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹265.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement