LOADING...
நகை பிரியர்களுக்கு நிம்மதி; இன்றைய (அக்டோபர் 31) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய (அக்டோபர் 31) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை பிரியர்களுக்கு நிம்மதி; இன்றைய (அக்டோபர் 31) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 31, 2025
10:49 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலையால் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) எந்த மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையே நீடிக்கிறது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹11,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹90,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹12,328 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹98,624 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் மாற்றமில்லாமல் நீடிக்கிறது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹9,420 ஆகவும், ஒரு சவரன் ₹75,360 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் வெள்ளிக்கிழமை மாற்றமின்றி நீடிக்கிறது. வெள்ளி விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹165.00 ஆகவும், ஒரு கிலோ ₹1,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இந்நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலையற்ற தன்மையிலேயே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.