ஏறிய வேகத்தில் மீண்டும் தடாலடி சரிவு; இன்றைய (அக்டோபர் 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (அக்டோபர் 30) சரிவை சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹225 சரிந்து ₹11,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1800 சரிந்து ₹88,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹246 சரிந்து ₹12,109 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,968 சரிந்து, ₹96,872 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹190 அதிகரித்து ₹9,260 ஆகவும், ஒரு சவரன் ₹1,520 சரிந்து ₹74,080 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் வியாழக்கிழமை குறைந்துள்ளது. வெள்ளி விலை வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹1.00 குறைந்து ₹165.00 ஆகவும், ஒரு கிலோ ₹1,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இந்நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலையற்ற தன்மையிலேயே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.