Loading...
தொடர் சரிவுக்குப் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் 
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தொடர் சரிவுக்குப் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் 

எழுதியவர் Sekar Chinnappan
Nov 02, 2026
09:55 am

செய்தி முன்னோட்டம்

கடந்த வார இறுதியில் மிகப்பெரிய சரிவை சந்தித்த தங்கத்தின் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (நவம்பர் 2), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹45 அதிகரித்து ₹12,775 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹360 அதிகரித்து ₹1,02,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹49 அதிகரித்து ₹13,937 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹392 அதிகரித்து ₹1,11,496 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

அதன் படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹37 அதிகரித்து ₹10,453 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹296 அதிகரித்து ₹83,624 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹200.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,00,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT