Loading...
கிஃப்ட் நிஃப்டி வர்த்தக நேரத்தில் மாற்றம்: காலை 5:15 மணி முதல் வர்த்தகம் தொடக்கம்
இந்த புதிய நேர அட்டவணை திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது

கிஃப்ட் நிஃப்டி வர்த்தக நேரத்தில் மாற்றம்: காலை 5:15 மணி முதல் வர்த்தகம் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2026
03:11 pm

செய்தி முன்னோட்டம்

குஜராத்தின் காந்திநகரில் உள்ள 'கிஃப்ட் சிட்டி' சர்வதேச நிதித் தொழில்நுட்ப மையத்தில் இயங்கும் என்எஸ்இ சர்வதேச பங்குச் சந்தை (NSEIX), கிஃப்ட் நிஃப்டி ஒப்பந்தங்களுக்கான வர்த்தக நேரத்தை 23.5 மணி நேரமாக நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய நேர அட்டவணை திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களின் வசதிக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள நேரங்கள்: முதல் அமர்வு:காலை 5:00 மணிக்குத்தொடங்கும். இயல்பு வர்த்தகம்:காலை 5:15 மணி முதல் மாலை 3:40 மணி வரை நடைபெறும். இரண்டாவது அமர்வு மாலை 3:58 மணிக்குத் தொடங்கும். இரவு வர்த்தகம்: மாலை 4:00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2:45 மணி வரை (IST) தொடர்ந்து நடைபெறும்.

முக்கியத்துவம்

23.5 மணி நேர வர்த்தகத்தின் முக்கியத்துவம்

இப்புதிய மாற்றத்தின் மூலம், NSEIX சந்தை நாள்தோறும் அதிகாலை 3:15 மணி முதல் மறுநாள் அதிகாலை 2:45 மணி வரை (சுமார் 23.5 மணி நேரம்) இயங்கும் சூழல் உருவாகியுள்ளது.

இது ஆசிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரங்களை ஒரே நேரத்தில் முழுமையாக உள்ளடக்குகிறது.

உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் உடனடியாகத் தங்களின் பங்குச் சந்தை முதலீடுகளை நிர்வகிக்க இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.

உரை

NSEIX தலைமை நிர்வாக அதிகாரி உரை

இம்மாற்றம் குறித்து NSEIX அமைப்பின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (MD & CEO) வி. பாலசுப்ரமணியம் கூறுகையில், "கிஃப்ட் சிட்டியை ஒரு உலகளாவிய சர்வதேச வர்த்தக மையமாக (Global Marketplace) மாற்றும் எங்களது தொடர் முயற்சிகளில், இந்த 23.5 மணி நேர வர்த்தக நீட்டிப்பு ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும். இது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அதிக வசதியையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும்," எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT