Page Loader
போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்

போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2024
06:46 pm

செய்தி முன்னோட்டம்

செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நிதித்துறை சார்ந்த முக்கியமான சில மாற்றங்கள் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வர உள்ளது. இவை உங்கள் நிதி மற்றும் முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்: சிறு சேமிப்பு விதிகள்: வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்குகள் போன்ற அஞ்சல் அலுவலக சிறு சேமிப்பு கணக்குகள் அக்டோபர் 1 முதல் புதிய மாற்றங்களுக்கு உட்பட்டவை.

அஞ்சலகம்

அஞ்சலக சேமிப்பு கணக்குகள்

தற்போது, ​வசிப்பிட விவரங்கள் இல்லாமல் திறக்கப்பட்ட PPF கணக்குகளை கொண்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு விகிதத்தில் தொடர்ந்து வட்டி பெறுகின்றனர். இந்த விகிதம் செப்டம்பர் 30, 2024 வரை பொருந்தும். இந்தத் தேதிக்குப் பிறகு இந்தக் கணக்குகளுக்கான வட்டி 0% ஆகக் குறையும். கணக்கு வைத்துள்ளவர்கள் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வட்டி வழங்கப்படும். அதன் பின்னர் வட்டி சேர்க்கப்படாது. இதேபோல், ஒன்றுக்கு மேற்பட்ட PPF கணக்கு வைத்துள்ளவர்களின் கணக்குகள் இணைக்கப்பட்டு, ஒரு கணக்கிற்கு மட்டுமே வட்டி வழங்கப்படும். SSY கணக்குகளை பொறுத்தவரை, பேரக்குழந்தைகளுக்காக கணக்கு தொடங்கிய முதியவர்கள் பெற்றோரிடம் அல்லது சட்டபூர்வ பாதுகாவலருக்கு உரிமையை மாற்ற வேண்டும்.

டிடிஎஸ்

அசையா சொத்து விற்பனைக்கு டிடிஎஸ்

��50 லட்சத்துக்கும் அதிகமான அசையாச் சொத்தை விற்றால் அதற்கு 1% டிடிஎஸ் செலுத்த வேண்டும் என்று விதித்துள்ள பிரிவு 194-IA திருத்தங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இவை தவிர, ஸ்மார்ட்பை பிளாட்ஃபார்மில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ரிவார்டு புள்ளிகளை ஒவ்வொரு காலண்டர் காலாண்டிலும் ஒரு தயாரிப்பாக மாற்றுவதை எச்டிஎப்சி வங்கி நிறுத்தியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி இணையதளத்தின்படி, அக்டோபர் 01, 2024 முதல், முந்தைய காலண்டர் காலாண்டில் ரூ.10,000 செலவளித்திருந்தால், இரண்டு இலவச விமான நிலைய லவுஞ்ச் அணுகலை பெறலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்புக் கணக்கு, டிமாண்ட் டிராஃப்ட், டிடி, காசோலைகள் மற்றும் லாக்கர் வாடகைக் கட்டணங்கள் உள்ளிட்ட சில சேவைகளுக்கான கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது.