Page Loader
எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் xAI க்கு மாற்றம்; எலான் மஸ்க் அறிவிப்பு
எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் xAI க்கு மாற்றம்

எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் xAI க்கு மாற்றம்; எலான் மஸ்க் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 29, 2025
09:16 am

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸை, $33 பில்லியன் மொத்த பங்கு ஒப்பந்தத்தில் தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI க்கு அதிகாரப்பூர்வமாக விற்றுள்ளார். வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, டிஜிட்டல் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக xAI யின் மேம்பட்ட ஏஐ திறன்களை எக்ஸின் விரிவான பயனர் தளத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் $44 பில்லியனுக்கு எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தை வாங்கிய எலான் மஸ்க், அதன் பின்னர் தளத்தை மறுசீரமைத்து, அதன் கொள்கைகள் மற்றும் வணிக மாதிரியை மாற்றியுள்ளார். இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், அவர் xAI ஐ ஏஐ துறையில் ஒரு முக்கிய நிலைநிறுத்தி உள்ளார்.

மதிப்பீடு

xAI நிறுவனத்தின் மதிப்பீடு

xAI நிறுவனம் தற்போது $80 பில்லியன் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்தார். எக்ஸை xAI உடன் இணைப்பது தரவு, மாதிரிகள் மற்றும் கணினி சக்தியின் ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்றும், மேலும் புத்திசாலித்தனமான மற்றும் அர்த்தமுள்ள பயனர் அனுபவங்களுக்கு வழி வகுக்கும் என்றும் எலான் மஸ்க் கூறினார். "xAI மற்றும் எக்ஸின் எதிர்காலங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. இந்த கலவையானது மகத்தான ஆற்றலைத் திறக்கும்" என்று எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, இரு நிறுவனங்களின் நிதி விவரங்கள் எலான் மஸ்கின் மதிப்பீட்டு கூற்றுக்களுக்கு அப்பால் வெளியிடப்படாமல் ரகசியாகவே வைக்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

எலான் மஸ்கின் எக்ஸ் தள பதிவு