எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலராக உயர்வு
செய்தி முன்னோட்டம்
உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விரைவில் பொது பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகி வருவதன் காரணமாக, வரலாறு காணாத அளவில் 600 பில்லியன் டாலராக (இந்தியா ரூபாய் மதிப்பில் சுமார் ₹48 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு (2026) 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பொதுப் பங்கு வெளியீட்டிற்குச் செல்ல வாய்ப்புள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து, மஸ்க் உலகின் முதல் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள நபராகியுள்ளார்.
பங்குகள்
எலான் மஸ்கின் பங்குகள் அவரது சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளது
ஸ்பேஸ்எக்ஸில் மஸ்க் சுமார் 42% பங்குகளை வைத்திருக்கிறார். இந்த மதிப்பீட்டின் மூலம், அவரது சொத்து மதிப்பு மேலும் 168 பில்லியன் டாலர் உயர்ந்து 677 பில்லியன் டாலராக அதிகரிக்கக்கூடும் என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. எலான் மஸ்க், எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா இன்க்-கில் சுமார் 12% பங்குகளை வைத்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டெஸ்லா பங்குகள் சுமார் 13% உயர்ந்துள்ளது. ரோபோடாக்சி சோதனைகள் குறித்த அவரது சமீபத்திய அறிவிப்புக்கு பிறகு, இந்த பங்குகள் மேலும் 4% உயர்ந்தது. அவரது செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்பான xAI, 230 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 15 பில்லியன் டாலர் புதிய நிதியை திரட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.