NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / டொமைனை இலவசமாகவே தரத் தயார்; ஜியோஹாட்ஸ்டார் சர்ச்சையில் புதிய திருப்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டொமைனை இலவசமாகவே தரத் தயார்; ஜியோஹாட்ஸ்டார் சர்ச்சையில் புதிய திருப்பம்

    டொமைனை இலவசமாகவே தரத் தயார்; ஜியோஹாட்ஸ்டார் சர்ச்சையில் புதிய திருப்பம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 11, 2024
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு ஆச்சரியமான திருப்பமாக, சர்ச்சைக்குரிய ஜியோஹாட்ஸ்டார் டொமைனை சமீபத்தில் வாங்கிய துபாயைச் சேர்ந்த சகோதரர்களான 13 வயதான ஜெய்னம் மற்றும் 10 வயதான ஜீவிகா ஜெயின், அதை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு இலவசமாக கொடுக்க முன்வந்துள்ளனர்.

    இரண்டு உடன்பிறப்புகளும் டெல்லி ஆப் டெவலப்பர் ஒருவரிடமிருந்து டொமைனைப் பெற்றனர். அவர் முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ₹1 கோடி கேட்டு தனது கல்விக்கு நிதியளிக்கும்படி கோரியிருந்தார்.

    எனினும் அதை பின்னர் இந்த துபாய் சகோதரர்களுக்கு விற்றார்.

    இந்நிலையில், ஜெய்னம் மற்றும் ஜீவிகாவுக்கு அந்த டொமைனை வாங்க பல மின்னஞ்சல்கள் வருவதாகக் கூறியுள்ளனர்.

    எனினும், ஆப் டெவலப்பரின் லட்சியங்களை ஆதரிக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டதாகவும், டொமைனை லாபத்திற்காக விற்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினர்.

    இலவசம்

    ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்க முடிவு

    தங்கள் வலைத்தளமான jiohotstar.com இல் ஒரு அறிக்கையில், உடன்பிறப்புகள் இருவரும் ரிலையன்ஸுக்கு டொமைனை வழங்குவதற்கான தங்கள் விருப்பத்தை தெளிவுபடுத்தினர்.

    தங்களின் சலுகையானது தானாக முன்வந்து மற்றும் வெளிப்புற அழுத்தம் இல்லாமல் செய்யப்பட்டது என்பதை வலியுறுத்தி, டொமைனை அனைத்து முறையான ஆவணங்களுடன் இலவசமாக வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, ஜியோ சினிமா-ஹாட்ஸ்டார் இணைப்பின் வதந்திகளால் ஈர்க்கப்பட்ட டொமைனின் அசல் உரிமையாளர், தனிப்பட்ட நிதியுதவிக்கான டொமைனின் திறனைப் பயன்படுத்த முயன்றபோது ஜியோஹாட்ஸ்டார் சர்ச்சை தொடங்கியது.

    ரிலையன்ஸ் தனது முன்மொழிவை நிராகரித்தபோது, ​​டெவலப்பர் டொமைனை ஜெயின் உடன்பிறப்புகளுக்கு விற்றார்.

    அவர்கள் இப்போது ரிலையன்ஸுக்குத் இலவசமாக தரத் தயாராக உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜியோ
    ஹாட்ஸ்டார்
    ரிலையன்ஸ்
    டிரெண்டிங்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜியோ

    மும்பையில் உள்ள ஸ்டோருக்கு ரூ.1 கோடி வாடகை செலுத்திய ஆப்பிள், ஏன்?  ஆப்பிள்
    இணையத்தில் கசிந்த ஜியோ 5G ஸ்மார்ட்போன் டிசைன் 5G
    இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள் அமேசான்
    இந்தியாவில் ரூ.999 விலையில் வெளியானது ஜியோவின் புதிய 'ஜியோ பாரத் போன்' மொபைல்

    ஹாட்ஸ்டார்

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? பிக் பாஸ் தமிழ்
    ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்? ஓடிடி
    OTT: இந்தாண்டு கோல்டன் குளோப் விருதுகள் வென்ற திரைப்படங்களை எங்கே பார்க்கலாம்? ஓடிடி
    சந்தாதாரர்களை இழக்கும் டிஸ்னி+.. வளர்ச்சியடையும் ஜியோசினிமா! ஐபிஎல்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! தொழில்நுட்பம்
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்

    டிரெண்டிங்

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு விஜய் டிவி
    யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி டிடிஎஃப் வாசன்
    டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம் தமிழ் திரைப்படம்
    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025