LOADING...
இன்று முதல் அமலுக்கு வரும் நிதி சார்ந்த மாற்றங்கள்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இன்று முதல் அமலுக்கு வரும் நிதி சார்ந்த மாற்றங்கள்

இன்று முதல் அமலுக்கு வரும் நிதி சார்ந்த மாற்றங்கள்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 01, 2025
03:12 pm

செய்தி முன்னோட்டம்

டிசம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் முக்கிய நிதி விதி மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாடச் செலவுகள், கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. இதில் மாதந்தோறும் திருத்தப்படும் எரிபொருள் விலைகள், வங்கிக் கடன் வட்டி விகிதங்களை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் கூட்டம், அத்துடன் ஓய்வூதியம் மற்றும் வரி தொடர்பான முக்கிய காலக்கெடுக்கள் அடங்கும். கூடுதல் விபரங்கள் இங்கே:-

எரிவாயு சிலிண்டர்

எரிபொருள் விலை திருத்தங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜி மற்றும் விமானப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் ஏர் டர்பைன் எரிபொருள் ஆகியவற்றின் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் திருத்தி அறிவிக்கும். சர்வதேச சந்தையில் எரிபொருளின் சராசரி விலை மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்தைப் பொறுத்து இந்த விலைத் திருத்தம் அமையும். அந்த வகையில், டிசம்பர் 1 அன்று வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ₹10 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (ATF) விலை சுமார் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வட்டி விகிதம்

வங்கிக் கடன் மற்றும் வட்டி விகிதங்களில் தாக்கம்

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) கூட்டம் டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெற உள்ளது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான இந்தக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ வட்டி விகிதமானது வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறுகிய கால நிதியை வழங்கும் வட்டியாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த கடன் விகிதங்களுக்கு ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வீட்டுக் கடன் போன்ற பொதுமக்களின் கடன் வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்புள்ளது. நிபுணர்கள் குழு ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

வங்கி விடுமுறை

டிசம்பர் மாத வங்கி விடுமுறைகள்

டிசம்பர் 2025 இல் மொத்தம் 17 வங்கி விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வாராந்திர விடுமுறைகள் அடங்கும். டிசம்பர் 1, 3, 7, 12, 13, 14, 18, 19, 20, 21, 24, 25, 26, 27, 28, 30, மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் உள்ளூர் பண்டிகைகளைப் பொறுத்து இந்த விடுமுறைகள் மாறுபடும் என்பதால், முக்கியப் பரிவர்த்தனைகள் செய்வதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்களது உள்ளூர் வங்கிக் கிளையில் விடுமுறை விவரங்களைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

Advertisement

ஓய்வூதியம்

ஓய்வூதியம் மற்றும் வரிக் காலக்கெடு

ஓய்வூதியம் பெறுவோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கு நவம்பர் 30 கடைசித் தேதியாகும். மேலும், ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை (Jeevan Pramaan Patra) சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியும் நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இது தவறியவர்கள், வருமான வரித்துறை அபராதங்கள் அல்லது அறிவிப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.

Advertisement