Page Loader
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டாயம் இல்லையா? - அபராத நடைமுறையை கைவிடும் வங்கிகள்
குறைந்தபட்ச இருப்புத் தொகை அபராத நடைமுறையை கைவிடும் வங்கிகள்

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டாயம் இல்லையா? - அபராத நடைமுறையை கைவிடும் வங்கிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 08, 2025
01:43 pm

செய்தி முன்னோட்டம்

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறையை பொதுத்துறை வங்கிகள் கைவிட திட்டமிட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி அளிக்கவும், வங்கிகளின் சேவை முறைமையை நேர்த்தியாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் வங்கிகள், சம்பள கணக்குகள் அல்லது பிக்சட் டெப்பாசிட் வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதிக்கவில்லை. இதனால், பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளை மக்கள் அதிகம் தேர்வு செய்யும் வங்கியாக காணப்படுகிறது.

வங்கிகள்

அமல்படுத்தத் தொடங்கிய வங்கிகள்

இந்நிலையில், கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை, குறைந்தபட்ச இருப்பு விகிதத்துக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை ஏற்கனவே கைவிட்டுள்ளன. இதற்கு பதிலாக, டெபிட் கார்ட், ஏ.டி.எம்., மற்றும் அதிக பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்ற வழிகளின் மூலம் வருவாய் ஈட்ட திட்டங்களை வகுத்துள்ளன. மத்திய நிதி அமைச்சகம் நடத்திய அண்மைய கூட்டங்களில், வங்கிகள் நிகர லாபத்தை விட அதிகமாக அபராதக் கட்டணம் வசூலித்ததாக எழுந்த கடுமையான விமர்சனங்கள், இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர் நலனையும், வங்கிகள் மீது நம்பிக்கையையும் பெருக்கும் நோக்கில் இந்தப் பயன்முறைகளை புதுப்பிக்க வங்கிகள் முன்வருகின்றன.