LOADING...
வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.33.50 குறைப்பு; புதிய விலை என்ன?
வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.33.50 குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.33.50 குறைப்பு; புதிய விலை என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2025
08:19 am

செய்தி முன்னோட்டம்

ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக எரிவாயு சிலிண்டர்களின் (எல்பிஜி) விலையை ரூ.33.50 குறைந்துள்ளது. இது வணிக எல்பிஜி இணைப்புகளைப் பயன்படுத்தும் ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட நுகர்வோருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலைகள் மாறாமல் உள்ளன. விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் இப்போது ரூ.1631 ஆக உள்ளது. இது கொல்கத்தாவில் ரூ.1734 ஆகவும், மும்பையில் ரூ.1582.50 ஆகவும் குறைந்துள்ளது. சென்னையிலும் விலை குறைந்து, ரூ.1823.50ல் இருந்து ரூ.1790 ஆகக் குறைந்தது.

விலை குறைப்பு

இரண்டாவது விலை குறைப்பு

கடந்த மே மாதத்தில் இருந்து வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கான விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் உணவுத் துறைகளில் வணிகங்களில் ஏற்படும் செலவு அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலைகள் நிலையானதாகவே உள்ளன. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.868.50 ஆக தொடர்கிறது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களை பொறுத்தவரை கடைசியாக கடந்த ஏப்ரலில் ரூ.50 உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.