அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.
தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு.
இந்நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 17 ஆம் தேதியில், 22 காரட் ஆபரணத் தங்கமானது கிராமுக்கு 5,650-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை எட்டியுள்ளது - இன்றைய நிலவரம்
அதுவே சவரனுக்கு நேற்றைய விலையான 560 ரூபாய் விதம் குறைந்து அதே விலையில், ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், 18 காரட் ஆபரணத் தங்கம் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 4,628 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.37,024 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையை பொறுத்த வரையில், ஒரு கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.81.60 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,600 எனவும் விற்பனையாகிறது.