'கஸ்தூரி' வர்த்தக அடையாளத்தின் கீழ் இந்திய பருத்தி, மத்திய அரசின் புதிய திட்டம்
செய்தி முன்னோட்டம்
உலகளவில் பருத்தி உற்பத்தியில் முதலிடத்திலும், பருத்தி பயன்பாட்டில் இரண்டாமிடத்திலும் இருக்கிறது இந்தியா. ஆனால் பருத்தி மற்றும் பருத்தி மதிப்புக்கூட்டுப் பொருட்கள் ஏற்றுமதியில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து மூன்றாவது இடத்திலேயே இருக்கிறது இந்தியா.
இந்நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் பருத்திப் பொருட்களை 'கஸ்தூரி காட்டன்' என்ற வர்த்தகப் பெயரின் கீழ் தரமான பருத்தி என்ற பெயரைப் பெற புதிய திட்டத்தைத் செயல்படுத்தவிருக்கிறது மத்திய அரசு.
உலகளவில், இந்திய பருத்தியானது மாசுபட்டது எனக் கூறி பிற நாட்டுப் பருத்தியை விட சில செண்ட்கள் குறைவான விலையிலேயே விற்பனையாகி வருகிறது. இந்த நிலையை மாற்றவே, கஸ்தூரி காட்டன் என்ற பெயரில் தரமான பருத்தியை வழங்கத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.
இந்தியா
கஸ்தூரி காட்டன்:
மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் கஸ்தூரி காட்டன் இந்தியா திட்டமானது, வரும் அக்டோபர் 2023 முதல் அடுத்த ஆண்டு வரை ஒரு வருடத்திற்கு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது இத்திடத்திற்கான தொடக்கப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.
இத்திடத்தின் கீழ், இந்தியாவில் விளைவிக்கப்பட்க்கூடிய பருத்தி தர நிர்ணயத்திற்கு உட்படுத்தவிருக்கிறது மத்திய அரசு. மேலும், பருத்தி விவசாயிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தரமான பருத்தியை உற்பத்தி செய்வதற்கா மேம்பாடுகள் செய்யப்படவிருக்கின்றன.
இதன் மூலம், உலகளவில் இந்திய பருத்திக்கான மதிப்பு உயர்வதோடு, அதன் மூலம் இந்தியாவிற்குக் கிடைக்கும் வருவாயும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம்
திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த இடைநிற்கும் தடைகற்கள்:
ஒரு பருத்தியின் தரமானது, அதன் நீளம், வலிமை, தண்ணீர் பதம் மற்றும் மாசுபாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் 40 வகையான பருத்திகள் அறுவடை செய்யப்படுகின்றன.
பல்வேறு இடங்களில், பல்வேறு சூழ்நிலைகளில் விளையும் பருத்தியை ஒரே தர நிர்ணயித்தின் கீழ் எப்படிக் கொண்டு வர முடியும் என பருத்தி விவசாயம் மற்றும் தொழிற்துறையில் இருக்கும் வல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அரசும், அரசு அதிகாரிகளும் கள நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
உலகிலேயே அதிக அளவிலான பருத்தி பயிரிடுவதில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, அதன் உற்பத்தியில் 38வது இடத்திலேயே இருக்கிறது. இதனை மாற்ற, விவசாய முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் சிலர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.