Loading...
IDBI வங்கி பங்குகளை வாங்கும் Fairfax: ரூ.52,878 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
IDBI வங்கி பங்குகளை வாங்கும் கனடாவை சேர்ந்த Fairfax

IDBI வங்கி பங்குகளை வாங்கும் Fairfax: ரூ.52,878 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2026
05:25 pm

செய்தி முன்னோட்டம்

ஐடிபிஐ வங்கிப் பங்குகளை விற்பனை செய்யும் நீண்ட காலத் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக, கனடாவை சேர்ந்த Fairfax Financial Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான 10955230 Canada Inc. நிறுவனத்தை மூலோபாய வாங்குபவராக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இப்புதிய பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு ரூ.52,878 கோடி ஆகும். இதன்படி, மத்திய அரசும், LIC-ம் இணைந்து தங்களது வசம் உள்ள மொத்த பங்குகளில் 60.72 சதவீத பங்குகளை விற்கவுள்ளன. இந்த விற்பனை மூலம் கிடைக்கும் தொகையானது இருதரப்புக்கும் இடையேயான பங்கு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பிரித்து வழங்கப்பட உள்ளது.

பங்கு

பங்குகள் விற்பனை

இந்த விற்பனைக்கு பிறகும் கூட மத்திய அரசு 15 சதவீத பங்குகளையும், LIC நிறுவனம் 19 சதவீத பங்குகளையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2018-ஆம் ஆண்டில் 31.78 சதவீதமாக இருந்த ஐடிபிஐ வங்கியின் வாராக் கடன் விகிதம், மார்ச் 2026 நிலவரப்படி 2.32 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும், 2026-ஆம் நிதியாண்டில் வங்கி ரூ.9,513 கோடி சாதனை நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

விளக்கம்

வாடிக்கையாளர்கள் மற்றும் வைப்பீட்டாளர்களுக்கு விளக்கம்

இந்த பங்குகள் மாற்றத்தால் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வைப்பீட்டாளர்கள் எந்தவிதத்திலேயும் பாதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நேரடி மேற்பார்வை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

மேலும், வைப்பீட்டுக் காப்பீட்டு வரம்பு ரூ. 5 லட்சம் வரை பாதுகாப்பாகத் தொடரும்.

வங்கியானது தொடர்ந்து முன்னுரிமை துறை கடன் வழங்கல் விதிகளையும், பிரதமரின் ஜன் தன் யோஜனா மற்றும் முத்ரா போன்ற அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வாராக் கடன் சுமையிலிருந்து வங்கி மீண்டு வந்துள்ள நிலையில், இந்த முதலீடு வங்கியின் எதிர்கால வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT