Page Loader
தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் பைஜுவின் பணிநீக்கங்கள்
பைஜூஸ் நிறுவனம், ஊழியர்களுக்கு நோட்டீஸ் காலமும் வழங்கவில்லை

தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் பைஜுவின் பணிநீக்கங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 02, 2024
03:11 pm

செய்தி முன்னோட்டம்

எட்டெக் நிறுவனமான பைஜூஸ், வெறும் தொலைபேசி அழைப்புகளில் பணிநீக்கங்களைத் தொடங்கி, பணியாளர்களை செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (பிஐபி) சேர்க்காமல் விட்டுவிடுகிறார்கள் என நிர்வாகத்தினர் தெரிவித்ததாக மணிகண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனம், ஊழியர்களுக்கு நோட்டீஸ் காலமும் வழங்கவில்லை என அந்த அறிக்கை மேற்கோளிட்டு காட்டியுள்ளது. பைஜூவின் இந்த புதிய சுற்று பணிநீக்கங்களினால் 100 முதல் 500 பணியாளர்கள் பாதிக்கப்படலாம் என அந்த அறிக்கை கூறுகிறது. இதில் மிகவும் பாதிக்கப்படும் துறை, சேல்ஸ் துறையாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கம் இரண்டு வாரத்திற்கு முன்பே துவங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் நிறுவனம் முழுவதிலும் கிட்டத்தட்ட 4500 பணியிடங்கள் பாதிக்கப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பைஜூஸ் நிறுவனம் 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

embed

பைஜுவின் பணிநீக்கங்கள்

Layoffs At #Byju's | Byju's to lay off 500 employees as part of a business restructuring exercise. #Layoffs started two weeks ago, as part of business restructuring announced earlier, sources to @_ritusingh pic.twitter.com/PP6B6rqvLE— CNBC-TV18 (@CNBCTV18Live) April 2, 2024