LOADING...
பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று முதல் ATM கட்டணம் உயர்வு!
இன்று முதல் ATM கட்டணம் உயர்வு

பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று முதல் ATM கட்டணம் உயர்வு!

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2025
09:42 am

செய்தி முன்னோட்டம்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதலின்படி, ஏ.டி.எம். பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய கட்டண விதிகள் இன்று (மே 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. புதிய நடைமுறையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி ATM-இல் பணம் எடுப்பதில் மெட்ரோ நகரங்களில் 5 முறைகள் மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் 3 முறைகள் வரை இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம். இதைத்தாண்டி ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ரொக்கம் அல்லாத ஏ.டி.எம். சேவைகளான பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.6-லிருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணங்களை மீள்பரிசீலனை செய்து உயர்த்த அனுமதி அளித்த ரிசர்வ் வங்கியின் முடிவைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post