Page Loader
இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்
இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்

இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்

எழுதியவர் Prasanna Venkatesh
Sep 12, 2023
10:49 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கேகேஆர் (KKR), இந்தியாவின் முன்னணி வணிகக் குழுமங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிறுவனத்தில் ரூ.2,069.50 கோடியை முதலீடு செய்யவிருக்கிறது. முன்னதாக, 2020ம் ஆண்டே ரூ.4.21 லட்சம் கோடி என்ற முன்பண பங்கு மதிப்பீட்டில், ரூ.5,550 கோடியை RRVL நிறுவனத்தில் அந்நிறுவனம் முதலீட்டு செய்திருக்கிறது. தற்போது ரூ.8.361 லட்சம் கோடி என்ற முன்பண பங்கு மதிப்பீட்டில் ரூ.2069.50 கோடியை முதலீடு செய்வதன் மூலம், RRVL நிறுவனத்தில் தங்களுடைய பங்குகளின் அளவை 1.42 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது கேகேஆர். தற்போது RRVL நிறுனத்தின் இயக்குநராக, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியே பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம்

KKR-ன் கூடுதல் முதலீடு: 

RRVL நிறுவனத்தில் KKRன் முதலீடு குறித்து, "எங்களுடைய முதலீட்டாளரான KKR-டமிருந்து தொடர்ந்து ஆதரவைப் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. RRVL-ல் KKR-ன் இந்தக் கூடுதல் முதலீடானது இரு நிறுவனங்களுக்கிடையேயான உறவை பலப்படுத்தியிருக்கிறது. இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து இந்த நல்லுறவைப் பேன விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய முதலீடை மேற்கொள்வது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் KKR நிறுவனத்தின் துணை சிஇஓவான ஜோ பேயும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தங்களுடைய துணை நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மூலமாக, மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஃபார்மா எனப் பல்வேறு துறைகளில் 18,500-க்கும் மேற்பட்ட சில்லறை வணிக கடைகளை இயக்கி வருகிறது RRVL.