Loading...
ஏர்டெல் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அறிமுகம்: இலவச சர்வதேச ரோமிங் மற்றும் அன்லிமிடெட் டேட்டா சலுகைகள்
ஏர்டெல் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அறிமுகம்

ஏர்டெல் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அறிமுகம்: இலவச சர்வதேச ரோமிங் மற்றும் அன்லிமிடெட் டேட்டா சலுகைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2026
05:11 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக ₹499 முதல் தொடங்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டங்களின் சிறப்பம்சமாக, ஒவ்வொரு போஸ்ட்பெய்ட் சிம் கார்டுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை இலவச சர்வதேச ரோமிங் பயணம் வழங்கும் சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகைகள் அனைத்தும் அக்டோபர் 8, 2026 முதல் கிடைக்கத் தொடங்கும்.

ரோமிங் பேக்

இலவச சர்வதேச ரோமிங் பேக் விவரங்கள்

புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள இலவச சர்வதேச ரோமிங் பேக் மூலம் பயனர்கள் பின்வரும் சலுகைகளைப் பெறலாம்:

டேட்டா: 5 GB அதிவேக டேட்டா.

அழைப்புகள்: 60 நிமிடங்கள் இலவச அழைப்புகள்.

SMS சலுகைகள்: 25 வெளிச்செல்லும் SMS-கள் மற்றும் இலவச உள்வரும் SMS-கள்.

செல்லுபடியாகும் காலம்: 5 நாட்கள்.

பயனர்கள் தங்களுக்கு தேவையான நேரத்தில் இந்த ரோமிங் பேக்கைச் செயல்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்களை பயன்படுத்தும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு ஒரு இலவச சர்வதேச ரோமிங் பயணம் வழங்கப்படும்.

சலுகைகள்

புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் & சலுகைகள்

��499 தனிநபர் திட்டத்தில் 1 SIM பயன்பாட்டில், அன்லிமிடெட் டேட்டா & அழைப்புகள், Xstream Play Premium, Google One, ஸ்பேம்/மோசடி பாதுகாப்பு உள்ளிட்டவை கிடைக்கும்.

₹749 பேமிலி திட்டத்தில், 2 SIMகள் பயன்படுத்தலாம்.

இதில் அமேசான் ப்ரைம், ஜியோஹாட்ஸ்டார், Xstream Play Premium மற்றும் கூகிள்ஒன் ஆகியவை கிடைக்கும்.

இதுவே, ₹1,049 பேமிலி திட்டத்தில் 3 SIMகள் இணையலாம். இதில், ஆப்பிள் iCloud+, ஆப்பிள் மியூசிக், அமேசான் Prime, ஜியோஹாட்ஸ்டார், Xstream Play Premium மற்றும் கூகிள்ஒன் ஆகியவை கிடைக்கும்.

ADVERTISEMENT

பிரத்யேக அனுபவங்கள்

5G ஃபாஸ்ட் லேன் மற்றும் பிரத்யேக அனுபவங்கள்

சர்வதேச ரோமிங் சலுகையுடன் சேர்த்து, இந்த புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களில் 5G நெட்வொர்க்கில் ஃபாஸ்ட் லேன் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பயனர்களுக்கு அதிவேக இணைய இணைப்பு கிடைப்பதுடன், தேவையில்லாத ஸ்பேம் மற்றும் மோசடி லிங்க்குகளில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

மேலும், ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்கள் 'ஏர்டெல் போஸ்ட்பெய்ட் அட்வாண்டேஜ் கிளப்' மூலம் நகைச்சுவை நிகழ்ச்சிகள், திரைப்பட திரையிடல்கள் மற்றும் இசை கச்சேரிகளுக்கான பிரத்யேக டிக்கெட்டுகள் மற்றும் நுழைவு அனுமதிகளைப் பெற முடியும்.

ADVERTISEMENT