Loading...
அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை: ஏர் இந்தியா அதிரடி
அனைத்து விமானிகளுக்கும் கட்டாயப் பரிசோதனையை மேற்கொள்ள ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை: ஏர் இந்தியா அதிரடி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2026
03:40 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கி விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, தனது அனைத்து விமானிகளுக்கும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மருந்துகள் பயன்பாட்டிற்கான கட்டாயப் பரிசோதனையை மேற்கொள்ள ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறை விதிகளை தாண்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா நிறுவனம் தனது அனைத்து பைலட்களுக்கும் இந்த சோதனையை வியாழக்கிழமை முதல் கட்டாயமாக்கியுள்ளது. பூகெட் - டெல்லி விமானத்தின் தலைமைப் பைலட்டுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா (Marijuana) பயன்பாடு பாசிட்டிவ் என வந்ததைத் தொடர்ந்து, இரு விமானிகளும் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

DGCA

DGCA போதைப்பொருள் விதிகளில் மாற்றம்?

தற்போதுள்ள விதிகளின்படி, போதைப்பொருள் பரிசோதனையில் பாசிட்டிவ் என வரும் ஊழியர்கள் மறுவாழ்வுப் பயிற்சிக்கு அனுப்பப்படுவர்.

இரண்டாவது முறை மீறினால் 3 ஆண்டுகள் இடைநீக்கமும், மூன்றாவது முறை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஆனால், இச்சம்பவத்தைத் தொடர்ந்து சர்வதேச நடைமுறைகளை ஆய்வு செய்து, இந்தியாவில் உள்ள டோப் டெஸ்டிங் விதிகளை மேலும் கடுமையாக்குமாறு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், விமானப் போக்குவரத்து பொது இயக்ககத்திற்கு (DGCA) அறிவுறுத்தியுள்ளது.

விசாரணை

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) நடத்தி வரும் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன

300 அடி உயரம் குறைந்த அந்த 2 முதல் 3 நிமிட இடைவெளியில், விமானத்தில் பச்சை, மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய 3 ஹைட்ராலிக் அமைப்புகளிலும் குறைந்த அழுத்தம் ஏற்பட்டதாக 3 எச்சரிக்கைகள் உட்பட மொத்தம் 11 சிஸ்டம் அலாரங்கள் பதிவாகியுள்ளன.

ஹைட்ராலிக் எச்சரிக்கைகள் வந்த சிறிது நேரத்திலேயே விமானத்தின் ஆட்டோபைலட் தானாகவே செயலிழந்துள்ளது.

பின்னர் டெல்லியில் தரையிறங்குவதற்கு முன்னரும் ஆட்டோபைலட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விமானத்தின் அவசரகால வெளியேற்றக் கதவுகள் தொடர்பாகவும் எச்சரிக்கை மணிகள் ஒலித்துள்ளன.

ADVERTISEMENT

AAIB விசாரணை

விரைவுபடுத்தப்படும் AAIB விசாரணை

இந்த தொழில்நுட்பக் கோளாறுகளுக்கும், விமானத்தின் திடீர் உயர மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து பிரான்ஸ் நாட்டின் BEA அமைப்பு மற்றும் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து AAIB தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

விமானத்தின் கருப்புப் பெட்டி (FDR & CVR) தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் இதுகுறித்த இடைக்கால விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT