உடல் நலக்குறைவால் விடுப்பில் சென்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், முன்னறிவிப்பின்றி சிக் லீவில் சென்ற மூத்த கேபின் குழு உறுப்பினர்களை உடனடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு இந்த ஊழியர்கள் திடீர் விடுப்பு எடுத்ததால், நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை இரவு முதல் 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்யப்பட்டது. இதனால், சுமார் 15,000 பயணிகளை பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து இந்த பணிநீக்க உத்தரவு வந்துள்ளது. சம்பந்தப்பட்ட கேபின் க்ரு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட அறிக்கையில், விமானக் குழு உறுப்பினர்களின் நடவடிக்கை,"எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் முன்-மத்தியஸ்தம் மற்றும் ஒருங்கிணைந்த வேலையில் இருந்து விலகியதை சுட்டிக்காட்டியது" என்று கூறப்பட்டுள்ளது. கூட்டமாக சிக் லீவு என்பது பொருந்தக்கூடிய சட்டங்களை மீறுவது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிக்கை
"செவ்வாய்கிழமை விமானத்தில் ரோஸ்டர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னர், நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதற்கேற்ப கடைசி நேரத்தில் திட்டமிடல் குழுவிடம் தெரிவித்தீர்கள்." "அதே நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மற்ற கேபின் குழு உறுப்பினர்களும் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் முன்னரே தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இது எந்த நியாயமான காரணமும் இல்லாமல் முன்-மத்தியஸ்தம் மற்றும் 'ஒருங்கிணைக்கப்பட்ட' வேலையிலிருந்து விலகியிருக்கும் எண்ணத்தில் செய்யப்பட்டது என்பது தெளிவாக சுட்டிக்காட்டுகிறது," என அறிக்கை தெரிவிக்கிறது. இதன் விளைவாக, "அதிக எண்ணிக்கையிலான விமானங்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இதன் மூலம் முழு அட்டவணையையும் சீர்குலைக்க வேண்டி இருந்தது. இது எங்கள் மதிப்பிற்குரிய பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது" என்று விமான நிறுவனம் கூறியது.
பணி நீக்க உத்தரவு
"உங்கள் செயல், விமானத்தை இயக்காமல் இருப்பது மற்றும் நிறுவனத்தின் சேவைகளை சீர்குலைப்பது போன்ற பொதுவான புரிதலுடன் ஒருங்கிணைந்த செயலாகும்." "நீங்கள் இனி ஒரு பணியாளராகக் கருதப்பட மாட்டீர்கள்; உத்தியோகபூர்வ அஞ்சல்கள், சேவையகங்கள், பிற தகவல்தொடர்புகளுக்கான அணுகல் உங்களுக்கு இனி இருக்காது; நிறுவனத்தால் வழங்கப்படும் ஊழியர் தொடர்பான ஏதேனும் நன்மைகளுக்கும் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் இதற்குத் தகுதி பெற மாட்டார்கள்". ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிஇஓ அலோக் சிங் இவ்வாறு அறிவித்ததைத் தொடர்ந்து, கேபின் குழு நெருக்கடியின் விளைவாக, மே 13 வரை விமான சேவைகளை விமான நிறுவனம் குறைப்பதாக மின்னஞ்சல் அறிக்கை வந்தது.